top of page
Search

Benigh prostate hypertrophy (BPH)

  • paripooranasiddhac
  • Jul 11
  • 1 min read

ஆண்களின் சிறுநீர் பையில் இருந்து சிறுநீர் குழாய் துவங்கும் இடத்தில் அதனைச் சுற்றி புராஸ்டேட் சுரப்பி அமைந்துள்ளது. விந்து திரவத்தில் 5% வரை விதைகளிலிருந்தும்(testis) 65 சதம் செமினல் வெசிக்கல்(seminel vesicles )என்னும் சுரப்பிலிருந்தும் மீதி 30 சதம் ப்ராஸ்டேட் சுரப்பிலிருந்தும் சுரக்கிறது. ஆசிட் பாஸ்பட்டேஸ், கால்சியம், நாகம், பொட்டாசியம், பைப்ரினோலைசின் போன்ற பொருட்கள் இந்த சுரப்பின் மூலமாகவே விந்துவில் வெளிப்படுகிறது. வயது முதிர முதிர பல்வேறு காரணங்களால் குறிப்பாக ஆண் தன்மைக்கான டெஸ்ட்டோஸ்டீரான் அளவு குறைவதினால் இந்தச் சுரப்பி வீங்க துவங்குகிறது. சிறுநீர் பாதையை சூழ்ந்து இது அமைந்துள்ளதால் சிறுநீர் கழிக்கும் போது அவசரமாக சிறுநீர் கழிக்கும் உணர்வு, சொட்டுச் சொட்டாக சிறுநீர் வெளியேறுதல், சிறுநீர் கழித்த பிறகும் அதே உணர்வு உள்ளிட்ட குறி குணங்கள் தோன்றுகின்றன. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் இது போன்ற குறிகுணங்கள் தென்படின் மருத்துவரை அணுகி ஸ்கேன் பரிசோதனை மற்றும் இரத்தப் பரிசோதனைகள் செய்து கொள்வது அவசியம். அலட்சியமாகவிடின் சில நேரங்களில் புற்றுக்கட்டியாகவும் மாற வாய்ப்புகள் உள்ளது. பரிபூர்ணா சித்த மருத்துவ மையம் திருப்பூர் மற்றும் அவிநாசி கிளைகளில் புராஸ்டேட் வீக்கத்திற்கு என்று சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்ட வருகிறது.

ree

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page