top of page
Search

Osteoporosis

  • paripooranasiddhac
  • Jul 9
  • 1 min read

Osteoporosis

எலும்புகளின் வன்மை குறைதல்


நம்ம உடலின் கட்டமைப்புக்கு காரணமான எலும்புகள், அதனோடு தசைகள், மூட்டுகள் இணைந்து இயக்கத்துக்கு காரணமாக அமைகின்றன. தொடர்ந்து ஓடுதல், நடத்தல், உடற்பயிற்சி செய்தல் உள்ளிட்ட இயக்கங்களின் காரணமாக தசைகளும் எலும்புகளும் வன்மையடைந்து கொண்டே இருக்கும். இதற்கு நாம் உண்ணும் உணவில் உள்ள தாது உப்புக்கள் குறிப்பாக சுண்ணாம்பு பாஸ்பரஸ் வைட்டமின் D சத்தும் அவசியமாகிறது. வயது முதிர முதிர எலும்புகள் வன்மை குறைய ஆரம்பித்து அதன் அடர்த்தி குறைகிறது. இதன் காரணமாக எலும்புகள் எளிதில் உடையும் தன்மை உடையவையாக மாறுகின்றன. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், பூப்பு சுழற்சி நிறைவுற்ற பெண்கள், உடற்பயிற்சி அற்றவர்கள், நிழலில் நீண்ட நேரம் பணியாற்றுபவர்கள், கால்சியம் வைட்டமின் டி சத்து பற்றாக்குறை உடையவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக உள்ளது. எலும்பு அடர்த்தியினை அதிகரிக்க உணவில் கால்சிய சத்து நிறைந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்வதோடு குறைந்தது அரை மணி நேரம் உச்சி வெயிலில் உலாவுதல் அவசியம். சுண்ணாம்பு சத்து நிறைந்த பிரண்டை, முருங்கை, கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா உள்ளிட்டவற்றை உணவில் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பரிபூர்ணா சித்த மருத்துவ மையம் அவிநாசி மற்றும் திருப்பூர் கிளைகளில் எலும்பு அடர்த்தியை அதிகரிக்கும் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் எலும்புகள் வன்மை அடைவதுடன் மூட்டு வலி, இடுப்பு வலி, கழுத்து வலி உள்ளிட்ட எலும்பு சார்ந்த வலிகளும் வெகுவாக குறைகிறது. 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், குறிப்பாக பெண்கள், இளம் வயதிலேயே எலும்பு சார்ந்த வலி உள்ளவர்கள் இந்த சிகிச்சையில் இணைந்து பயன்பெறலாம்.

ree

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page