top of page
Search

சிறுநீரகக் கல்லுக்கு தீர்வு

  • paripooranasiddhac
  • Jul 13
  • 1 min read

இன்று நம்மில் பலர் சிறுநீரகக்கல் தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர். நமது உடலில் உற்பத்தியாகின்ற வளர்ச்சிதை மாற்ற கழிவுகள், அதிகப்படியான உப்புக்கள்,நீர் இவற்றை உடலின் தேவைக்கு ஏற்ப வைத்துக் கொண்டு மீதியை சிறுநீரகங்கள் வாயிலாக உடல் வெளியேற்றுகிறது. உடலின் நீர்த்துவம், அமில காரத்துவம், வெப்பநிலை, ரத்த அழுத்தம் இவற்றையும் சிறுநீரகம் பராமரிக்கிறது. ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி, வைட்டமின் டி செயல்பாடு இவற்றிலும் சிறுநீரகம் முக்கிய பங்கு வைக்கிறது. சிறுநீரகங்களில் உற்பத்தியாகும் சிறுநீரின் அடர்த்தி அதிகமாவதால் சில நேரங்களில் சிறுநீரகத்திலேயே சிறு சிறு கற்களாக உருவாகின்றன. இதற்கான காரணங்கள் தேவையான அளவு நீர் அருந்தாதது, அதிக இனிப்புச் சத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளுதல், சுண்ணாம்பு சத்து, ஆக்ஸிலேட்ச்சத்து நிறைந்த பொருட்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுதல், அடிக்கடி சிறுநீரகத் தொற்று ஏற்படுதல், உடல் பருமனாக இருத்தல் என பல காரணங்கள் கூறப்படுகின்றன. கற்கள் சிறிய அளவாக இருக்கும் போதே சிறுநீர் வழியாக பெரும்பாலும் வெளியேறி விடுகின்றன. ஆனால் சிலருக்கு அவ்வாறு வெளியேறாமல் தொடர்ந்து அளவில் அதிகரித்துக் கொண்டே வந்து பின் வலி உள்ளிட்ட குறி குணங்களை உண்டாக்கும். யூரிட்டர் என்னும் சிறுநீர் குழாயில் இந்த கற்கள் வந்து அடைத்து கொள்ளும்போது மிக அதிகமான வேதனையை உண்டாக்கும். சிறுநீரகங்கள் அளவில் பெரிதாக வீங்கவும் செய்யும்.

ree

வாரம் இரு முறை எண்ணெய் தேய்த்து குளித்தல், மாதம் ஒருமுறை குடல் சுத்தி செய்தல், உணவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளை எடுத்துக் கொள்ளுதல், தினமும் போதுமான அளவு நீர் அருந்துதல் உள்ளிட்ட வாழ்வியல் முறைகளை கடைபிடித்து கொண்டு சித்த மருந்துகளில் கற்களை கரைக்கின்ற மற்றும் சிறுநீரைப் பெருக்குகின்ற மூலிகை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கல் பிரச்சனையிலிருந்து தீர்வு காணலாம். பரிபூர்ணா சித்த மருத்துவ மையத்தில் சிறுநீரக கற்களுக்கு என்று சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. சிறுநீரக கல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உடனே அழைக்கவும்.

 
 
 

Recent Posts

See All

Comments


bottom of page