வெரிகோஸ் வெயின்(Vericose Vein)
- paripooranasiddhac
- Jul 23
- 1 min read
பின்னலாடை நிறுவனங்களில் பல மணி நேரம் நின்று கொண்டு பணியாற்றி வரும் நண்பர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை வெரிகோஸ் வெயின். இதய அழுத்தத்தின் மூலமாக ஆக்சிஜன் நிறைந்த ரத்தம், சுத்த ரத்த நாளங்கள் வழியாக பயணித்து திசுக்களை அடைந்து அவற்றை போசித்து அங்குள்ள வளர்ச்சிதை மாற்ற கழிவுகள், கார்பன் டை ஆக்சைடு இவற்றை எடுத்துக்கொண்டு மீண்டும் இதயத்தை நோக்கி பயணிக்கும் ரத்தக் குழாய்கள் தான் கார்ரத்தக் குழாய்கள். இவற்றில் ரத்தஅழுத்தம் மிகமிகக் குறைவாகவே இருக்கும். கால் பகுதியில் இருந்து புவிஈர்ப்புவிசையை எதிர்த்து பயணிக்கும் ரத்தம் திரும்ப கீழ் நோக்கி வராமல் தடுக்க அதன் உள்ளே உள்ள வால்வுகள் உதவுகின்றன. பல மணி நேரம் நின்று கொண்டு பணிபுரியும் நபர்களுக்கு இந்த வால்வுகள் செயலிழந்து ரத்தம் கால்களில் தேங்கத் துவங்குகிறது. இதனாலேயே கால்கள் வீங்குகின்றன. அதனைத் தொடர்ந்து கால் கறுத்தல், அரிப்பு, புண் உண்டாதல் உள்ளிட்ட பிற அறிகுறிகள் தோன்றுகின்றன. புற இதயம் என கருதப்படும் கால் கெண்டைச்சதைகள் அதிகம் பயன்படுத்தப்படாமல் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். நீண்ட நேரம் நின்று கொண்டிருப்பதை தவிர்த்தல், வாழ்வியல் முறையில் மாறுதல்களை ஏற்படுத்துதல், கால்கள் கெண்டைக்கால் சதைகளுக்கு என பிரத்தியேக உடற்பயிற்சி, யோகாசன பயிற்சிகள், இவற்றோடு ரத்த நாளங்களை வலுப்படுத்தும் சித்த மருந்துகளை எடுத்துக் கொள்ளும் போது இந்த பிரச்சனையின் தீவிரம் குறைவதோடு குறி குணங்கள் குறைகின்றன.

Comments