விரேசன சிகிச்சை: உங்கள் உடலுக்கு தேவையான சிகிச்சை
- paripooranasiddhac
- Sep 23, 2025
- 1 min read
Updated: Dec 3, 2025
விரேசன சிகிச்சையின் அடிப்படைகள்
விரேசனத்தால் வாதம் தாழும் என்பது சித்த மருத்துவத்தின் அடிப்படை கருத்தாகும். வாதமலாது மேனி கெடாது. உடலுக்கு ஒவ்வாத உணவுகளை எடுத்துக்கொள்ளும்போதும், நேரத்துக்கு உணவு உட்கொள்ளாமல் காலம் தவறி உணவு எடுத்துக்கொள்ளும்போதும், மாவுசத்து, எண்ணெய்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போதும் குடலில் வாதம் கூடுகிறது.
உடலின் சிக்கல்களை புரிந்துகொள்வது
இதனால் செரியாமை, வயிறு மந்தம், புரட்டல், மலச்சிக்கல், வாந்தி வருவது போன்ற உணர்வு போன்ற அறிகுறிகள் தோன்றும். குடலில் உருவான வாதம் பிற இடங்களுக்கு பரவி மூட்டுகளில், தசைகளில் வலியை ஏற்படுத்தும். நச்சுக்கள் ரத்தத்தில் கலந்து தோல் நோய்களை ஏற்படுத்தும்.
விரேசன சிகிச்சையின் முக்கியத்துவம்
இது மட்டுமல்லாது, குடலில் நன்மை புரியும் கிருமிகளின் எண்ணிக்கையை குறைத்து தீமை புரியும் கிருமிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும். இதற்கு சித்தர்கள் சொன்ன அதிஅற்புதமான உபாயமே விரேசன சிகிச்சை.
விரேசன சிகிச்சையின் பயன்கள்
விரேசன சிகிச்சையால் குடலில் மந்தத்தன்மை, மலம், வாயு, நச்சுக்கள் இவை முழுமையாக நீக்கப்பட்டு உடல் லகுத்தன்மை அடைகிறது. நோய்களின் வீரியம் குறைகிறது. தோலில் உள்ள கருமை நீங்குகிறது.
விரேசன மருந்துகள்
பல்வேறு விரேசன மருந்துகள் நடைமுறையில் உள்ளன. உடலின் வாத பித்த கப அமைப்பிற்கு ஏற்றவாறும் குறிகுணகளுக்கு ஏற்றவாறும் மாத்திரையாகவோ எண்ணெய் வடிவிலோ மெழுகாகவோ எடுத்துக்கொள்ளவேண்டும்.
சிகிச்சை அடிக்கடி எப்போது?
நான்கு மாதத்திற்கு ஒருமுறை விரேசன சிகிச்சை எடுத்துக்கொள்ளவேண்டும். வாத நோய்கள், தோல்நோய்கள் போன்ற நாள்பட்ட நோய்களுக்கு சிறந்த பயனளிக்கும்.
பரிபூரணா சித்த மருத்துவ மையம்
பரிபூரணா சித்த மருத்துவ மையம் திருப்பூர் கிளையில் சனிக்கிழமை நாட்களில் விரேசன மருந்து வழங்கப்படும். முழுமையான பலனை பெற தேக இலக்கணப்பரிசோதனை மற்றும் நாடி பரிசோதனைக்குப்பின் தகுந்த விரேசன மருந்தை தேர்ந்தெடுத்து வழங்குவது மிகமிக முக்கியம்.
உங்கள் உடலுக்கு விரேசன சிகிச்சை
விரேசன சிகிச்சை உங்கள் உடலுக்கு தேவையான சிகிச்சை. இது உடல் மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது.
வாழ்க நலமுடன்
மரு.ஆ. யாகசுந்தரம் MD(siddha)
வர்மம்& தோல்நோய் சிறப்பு மருத்துவர்
7598371009
7339338027



Comments